null
வீடியோ: ஏலத்தில் எந்த அணிக்கு விளையாட உள்ளீர்கள்- லயன் கேள்விக்கு ரிஷப் பண்ட்டின் நச் பதில்
- ஏலத்திற்கு முன்னதாக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டார்.
- டெல்லி அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்து வந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது
ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
போட்டியின் போது ரிஷப் பண்ட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பக்கம் சென்ற ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் அவரிடம் இந்த ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே ஐடியா இல்லை என சிரித்தப்படி பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.