விளையாட்டு

பாஸ்டன் தடகளம்: இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார்

Published On 2023-02-06 06:05 GMT   |   Update On 2023-02-06 06:05 GMT
  • தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியில 2.14 மீட்டர் தூரம் தாண்டினார்.
  • கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேஜஸ்வின் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.

பாஸ்டன்:

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பாஸ்டன் நியூபேலன்ஸ இன்டோர் கிராண்ட் பிரீ தடகள போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் 2.26 மீட்டர் தாண்டினார்.

முன்னாள் உலக சாம்பியனும், காமென்வெல்த் விளையாட்டில் தங்கம் பெற்ற வருமான பகாமசின் டொனால்ஸ் தாமசை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வின் சங்கர் தங்கம் வென்றார். டொனால்ட் 2.23 மீட்டர் தாண்டினார்.

தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியில 2.14 மீட்டர் தூரம் தாண்டினார். அதை தொடர்ந்து 2.19, 2.23, 2.26 மீட்டர் தாண்டினார். அவரது 4-வது முயற்சியில் தான் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேஜஸ்வின் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். வெளியரங்க மைதானத்தில் சங்கர் அதிகபட்சமாக 2.29 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார்.

அமெரிக்காவின் டேரில் சல்விவன் 2.19 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்று இருந்தார். 

Tags:    

Similar News