விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-01-11 15:55 GMT   |   Update On 2024-01-11 15:55 GMT
  • முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-1, 14-11 என முன்னிலை பெற்றிருந்தனர்.
  • 2-வது செட்டிடில் 6-11 என பின்தங்கிய நிலையில், பின்னர் கைப்பற்றி வெற்றி பெற்றனர்.

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஜோடி பிரான்ஸின் லூகாஸ் கோர்வீ- ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி 21-11, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் செட்டில் 10-1 என இந்திய ஜோடி முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் பிரான்ஸ் ஜோடி புள்ளிகளை தொடர்ந்து பெற்றதால் 14-11 என முன்னிலை இடைவெளி குறைந்தது. பின்னர் ஒரு புள்ளி கூட விட்டுக்காடுக்காமல் 21-11 என முதல் செட்டை கைப்பற்றியது.

2-வது செட்டில் பிரான்ஸ் ஜோடி முதலில் 11-6 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடி 21-18 எனக் கைப்பற்றியது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொண்ணப்பா- தனிஷா கிராஸ்டோ ஜோடி ஜப்பானை ஜோடியை 21-19, 13-21, 21-15 என வீழ்த்தியது.

கிதாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென் ஆகியொர் தொடக்க சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.

2024-ம் ஆண்டின் பேட்மிண்டன் உலக பெடரேசனின் முதல் தொடரான மலேசியா ஓபனின் முடிவுகள் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ரேங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Tags:    

Similar News