விளையாட்டு

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்தியாவின் மணீஷா அரையிறுதிக்கு முன்னேறினார்

Published On 2024-09-01 09:39 GMT   |   Update On 2024-09-01 09:39 GMT
  • பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
  • பேட்மிண்டனில் இந்தியாவின் மணீஷா அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.

இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே, பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மணீஷா ராம்தாஸ், ஜப்பானின் டொயோடா மோமிகாவை 21-13, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சக வீராங்கனை துளசிமதி முருகேசனை மணீஷா ராமதாஸ் சந்திக்க உள்ளார்.

Tags:    

Similar News