நீரஜ் சோப்ரா உடன் இருக்கும் வீடியோ வைரல்: மனு பாக்கர் சொல்வது என்ன?
- 2018-ல் இருந்து விளையாட்டு நிகழ்ச்சியின்போது நாங்கள் சந்தித்துள்வோம்.
- நாங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொண்டது கிடையாது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார்.
நீர்ஜ் சோப்ரா மனு பாக்கர் மற்றும் அவரது பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் மனு பாக்கர்- நீரஜ் சோப்ரா இடையே திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் உலா வந்தன.
இந்த தகவலை ஏற்கனவே மனு பாக்கர் தந்தை மறுத்திருந்தார். இந்த நிலையில் மனு பாக்கர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தள்ளார்.
"என்னைத் தொடர்பு படுத்தி வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது நடைபெற்றபோது நான் அங்கு இல்லை. ஆனால் 2018-ல் இருந்து விளையாட்டு நிகழ்ச்சியின்போது நாங்கள் சந்தித்துள்வோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொண்டது கிடையாது. இந்த தொடரின்போது கூட நாங்கள் கொஞ்சமாகத்தான் பேசிக்கொண்டோம். ஆனால் உலாவிக் கொண்டிருக்கும் வீடியோ தொடர்பான வதந்தியில் எந்த உண்மையில் இல்லை" என்றார்.
ஏற்கனவே, மனு பாக்கர் தந்தை ராம் கிஷன் பக்கர், எனது மகள் மிகவும் இளையவள் (young). திருமணத்திற்கான வயது கூட அவருக்கு இல்லை. தற்போது அவருடைய திருமணம பற்றி யோசிக்க கூட இல்லை எனக் கூறியிருந்தார்.