விளையாட்டு

சர்வீசஸ் அணிக்கு கோப்பையை வழங்கினார் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர்

தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு- பதக்கப் பட்டியலில் தமிழகத்திற்கு 5வது இடம்

Published On 2022-10-12 20:15 GMT   |   Update On 2022-10-12 20:16 GMT
  • 128 பதக்கங்களை வென்ற சர்வீசஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
  • ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது.

சூரத்:

36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.

39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் உள்பட 140 பதக்கங்களை கைப்பற்றிய மகாராஷ்டிரா அணி 2வது இடத்தை பிடித்தது. 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் உள்பட 116 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடத்தில் இருந்தது. 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 74 பதக்கங்களை வென்ற தமிழக அணி பதக்கப் பட்டியலில் 5 இடத்தில் நீடித்தது. 

நேற்று நடைபெற்ற வண்ண மிகு நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், முதலிடம் பிடித்த சர்வீசஸ் அணி நிர்வாகத்திடம் கோப்பையை வழங்கினார்.

ஐந்து தனிநபர் தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் எட்டு பதக்கங்களை வென்று கேரளாவை சேர்ந்த சஜன் பிரகாஷ், சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருதை பெற்றார்.

ஆறு தங்கப் பதக்கங்கள் உள்பட 7 பதக்கங்களை வென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 14 வயதான ஹாஷிகா ராமச்சந்திராவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது. 

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கான கொடி, கோவா விளையாட்டுத்துறை அமைச்சர் கோவிந்த் கவுட் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News