நீரஜ் சோப்ராவின் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான் - அர்ஷத் நதீம்
- ஈட்டி எரித்தலில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார்
- ஈட்டி எரிதலில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார்
பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று முன் தினம் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் நதீமின் தாயும் நீரஜ் சோப்ராவும் தனது மகன் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பாகிஸ்தான் திரும்பிய ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய நதீம், "ஒரு தாய் அனைவருக்கும் தாயாகவும் தான் உள்ளார். எனவே அவர் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். நீரஜ் சோப்ராவின் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். அவர் எனக்காக வேண்டிக்கொண்டார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.