விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு

Published On 2024-08-16 04:48 GMT   |   Update On 2024-08-16 04:48 GMT
  • மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கல பத்தக்கம் வென்றார்.
  • வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு.

புதுடெல்லி:

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பத்தக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெரா வத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறும்போது, அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு மகத்தான பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவருக்கு வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயின் பயணச் சீட்டு பரிசோதகரில் இருந்து சிறப்புப் பணி அதிகாரியாக இரட்டைப் பதவி உயர்வு அளிக்கப் பட்டது.

Tags:    

Similar News