பாரிஸ் ஒலிம்பிக் 2024

டெல்லி வந்திறங்கிய மனு பாக்கர்... நூற்றுக் கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு - வீடியோ

Published On 2024-08-07 06:55 GMT   |   Update On 2024-08-07 06:55 GMT
  • பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச்சுடுதலில் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மனுவின் குடும்பத்தினர் உட்பட 100 கணக்கானோர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில் விமானமானது ஒரு மணி நேரம் தாமதமாகி 9.20 மணிக்கு தரையிறங்கியது.

தொடர்ந்து மனு பாக்கருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர், இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் 10m ஏர் பிரிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10m பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News