மாரத்தான் நடை பந்தயம் கலப்பு அணிகள் பிரிவு: இந்தியாவின் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஏமாற்றம்
- ஸ்பெயின் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
- ஈகுவடார் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.
பாரீஸ் ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டது.
மொத்தம் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயின் ஜோடி அல்வாரோ மார்ட்டின்- மரியா பெரேஸ் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
ஈகுவடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ- கிளென்டா மோர்ஜோன் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.
ஆஸ்திரேலியாவின் ரிடியான் கவ்லே- ஜெமிமா மோன்டேஜ் ஜோடி 2 மணி நேரம் 51 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.
இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது. அதேபோல் செக்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறியது.