விளையாட்டு

உயரம் தாண்டுதல் போட்டியில் இறுதி சுற்று வாய்ப்பை இழந்தார் சர்வேஷ் குசாரே

Published On 2024-08-07 10:47 GMT   |   Update On 2024-08-07 10:47 GMT
  • "பி" பிரிவில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர்.
  • சர்வேஷ் குசாரே 2.15மீ உயரம் தாண்டி 13-வது இடத்தை பிடித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் தடகளம் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்று இந்திய நேரப்படி இன்று மதியம் நடைபெற்றது. மொத்தம் 31 பேர் தகுதிச் சுற்றில் கலந்து கொண்டர். "ஏ" பிரிவில் 15 பேரும், "பி" பிரிவில் 16 பேரும் கலந்து கொண்டர்.

"பி" பிரிவில் இந்தியாவின் சர்வேஷ் அணில் குஷாரே கலந்து கொண்டார். ஒவ்வொரு வீரரும் நான்கு முறை உயரம் தாண்ட வேண்டும். நான்கில் எது சிறந்த தாண்டுதலோ அது தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

இறுதிச் சுற்றுக்கு தகுதியான உயரம் 2.29 மீட்டர். இந்த தூரத்தை எட்டிவிட்டால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். இல்லையெனில் இரண்டு பிரிவிலும் இருந்து சிறந்த 12 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

சர்வேஷ் அணில் குஷாரே இரண்டு முயற்சிகளில் ஒன்றில் 2.15 மீட்டர் தூரம் தாண்டினார். இதனால் குஷாரே 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். "பி" பிரிவில் அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் ஹமிஸ் கெர் 2.27 மீட்டர் தாண்டினார். பி பிரிவில் ஐந்து பேரும், "ஏ" பிரிவில் ஏழு பேரும் என மொத்தம் 12 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News