null
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?: சொந்தமண்ணில் மல்லுகட்டும் ஆர்சிபி-மும்பை- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.
இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.
இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.
ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.
ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.