விளையாட்டு (Sports)

புரோ கபடி லீக் போட்டி: பெங்கால்- ஜெய்ப்பூர் இன்று மோதல்

Published On 2024-10-20 07:50 GMT   |   Update On 2024-10-20 07:50 GMT
  • தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
  • மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் 35-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டிலர்சை வீழ்த்தியது.

ஐதராபாத்:

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் 35-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டிலர்சை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8), குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களுரூ புல்ஸ் (இரவு 9) அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News