விளையாட்டு

புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி-பாட்னா இன்று மோதல்

Published On 2024-02-26 05:29 GMT   |   Update On 2024-02-26 05:29 GMT
  • லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
  • 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஐதராபாத்:

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஐதராபாத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டங்களில் தபாங் டெல்லி- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

Tags:    

Similar News