விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி அடைந்தார் ரஜாவத்

Published On 2024-07-07 08:43 GMT   |   Update On 2024-07-07 08:43 GMT
  • கனடா ஓபனில் பிரியன்ஷு ரஜாவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
  • இவர் அரையிறுதியில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

ஒட்டாவா:

கனடா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில், உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ரஜாவத், பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொண்டார்.

இதில் ரஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோற்று அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News