விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் ஏமாற்றம் அளித்த சாத்விக்-சிராக் ஜோடி

Published On 2024-08-01 12:12 GMT   |   Update On 2024-08-01 12:12 GMT
  • இன்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
  • ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-வூ யிக் சோ ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-13 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக மலேசிய ஜோடி 21-14 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை மலேசிய ஜோடி 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம்

இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News