விளையாட்டு

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக செல்வபிரபு தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Published On 2023-07-06 05:42 GMT   |   Update On 2023-07-06 05:42 GMT
  • செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
  • ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

சென்னை:

ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக (20 வயதுக்கு உட்பட்டோர்) தமிழகத்தை சேர்ந்த டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

மதுரையை சேர்ந்த 19 வயதான செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வபிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபுக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News