விளையாட்டு

வலியை அனுபவித்து வந்த வினேஷ் போகத் பதக்கம் வெல்ல வேண்டும் - நீரஜ் சோப்ரா

Published On 2024-08-06 15:20 GMT   |   Update On 2024-08-06 15:20 GMT
  • பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராடினர்.
  • ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், "வலியை அனுபவித்து வந்த வினேஷ் போகத் பதக்கம் வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். களத்தில் அவரது உழைப்பு தெரிகிறது. ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News