டி20 உலகக் கோப்பை - விராட் கோலி நீக்கம்?
- டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன
- விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான உகாண்டா முதல் முறையாக அறிமுகமாகிறது. இந்நிலையில் உலக கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.