விளையாட்டு

இன்றுடன் முடிவடைகிறது காமன்வெல்த் போட்டிகள்

Published On 2022-08-08 06:11 GMT   |   Update On 2022-08-08 06:11 GMT
  • பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.
  • பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா சார்பில் 106 வீரர்கள் , 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிகிறது.

கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.

பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

இன்றைய பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News