விளையாட்டு

பிபா உலகக்கோப்பை லோகோவை வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது: கத்தார் எச்சரிக்கை

Published On 2022-06-27 08:58 GMT   |   Update On 2022-06-27 08:58 GMT
  • உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது.
  • லோகோவை உரிய அனுமதியின்றி வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார்:

உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி உலகக்கோப்பை லோகோவை கார் நம்பர் பிளேட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கத்தார் பொதுமக்களை எச்சர்க்கை விடுத்துள்ளது.

இந்த லோகோவானது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிபா) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் சிறப்பு பதிப்புகள் ஏலம் விடப்பட்டு பதிவு செய்யப்பட்டவை என்று கத்தார் கூறுகிறது.

பதிவு செய்யப்படாத வாகனங்களில் லோகோவை நகலெடுத்து அமைப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News