டென்னிஸ்

ஒலிம்பிக்கிற்கு முன் பிரேக்அப்.. காதலுக்காக களமிறங்கிய Ex-கள்.. தங்கம் வென்றதும் முத்தமழை

Published On 2024-08-04 04:43 GMT   |   Update On 2024-08-04 04:43 GMT
  • டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
  • தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.

தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.

பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.

தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

Tags:    

Similar News