டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காஃப், பெகுலா, நவோமி ஒசாகா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-09-28 03:49 GMT   |   Update On 2024-09-28 03:49 GMT
  • கோகோ காஃப் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.
  • பெகுலா 6-1, 7(7)-6(4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரேலை எதிர்கொண்டார். இதில் கோகோ காஃப் 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா பிரான்ஸ் வீராங்கனை டயான் பாரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பெகுலா 6-1 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பாரி கடும் நெருக்கடி கொடுத்ததால் இந்த செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் பெகுலா 7(7)-6(4) என 2-வது செட்டையும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.

ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா கஜகஜஸ்தான் வீராங்கனை புடின்ட்சேவாவை 3-6, 6-4, 6-2 என வீழ்த்தினார்.

Tags:    

Similar News