டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா 2-வது சுற்றில் வெற்றி

Published On 2024-08-29 06:50 GMT   |   Update On 2024-08-29 06:50 GMT
  • ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.
  • டிஜெரே காயத்தால் விலகியதால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) லூசியா புரோன்ட்டியை (இத்தாலி) சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் ரஷிய வீராங்கனை அலெக் சாண்ட்ரோவுடன் மோதுகிறார்.

3-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) தட்ஜனா மரியாவை (ஜெர்மனி) எதிர் கொண்டார். இதில் கவூப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் 14-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெ ரிக்கா) செங் (சீனா) படோசா (ஸ்பெயின்), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.

முதல் 2 செட்டை ஜோகோவிச் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் அவர் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது டிஜெரே காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), பிரிட்ஸ்டி, யாபோ, ஷெல்டன் (அமெரிக்கா), ரூப்லெவ் (ரஷியா), கேஸ்பர்ரூட் (நார்வே) முசெட்டி (இத் தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

Tags:    

Similar News