டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்ற சின்னர்

Published On 2024-09-05 05:06 GMT   |   Update On 2024-09-05 05:06 GMT
  • சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
  • சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.

இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.

சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

Tags:    

Similar News