டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: இறுதிப்போட்டியில் அல்காரஸ் உடன் மோதும் ஜோகோவிச்

Published On 2024-08-03 06:20 GMT   |   Update On 2024-08-03 06:20 GMT
  • ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
  • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.

அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

Tags:    

Similar News