டென்னிஸ்

தினமும் கிண்டலுக்கு ஆளாகிறோம்.. ரோகன் போபண்ணா ஆதங்கம்

Published On 2024-08-02 02:07 GMT   |   Update On 2024-08-02 02:07 GMT
  • பலர் விளையாட்டு நட்சத்திரங்களை பார்க்கவே செல்கின்றனர்.
  • மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். இந்த போட்டிக்கு பிறகு தேசிய அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகன் போபண்ணா அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது.

ஓய்வு பெற்றுள்ள ரோகன் போபண்ணா இந்திய டென்னிஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசும் போது, "உண்மையை கூற வேண்டுமெனில் இந்தியா விளையாட்டை மையப்படுத்திய நாடு இல்லை. பலர் விளையாட்டு நட்சத்திரங்களை பார்க்கவே செல்கின்றனர்."

"நான் பல நிறுவனங்களை அணுகி எனக்கு ஸ்பான்சர் செய்யுங்கள் என கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த விளையாட்டு நாட்டில் காண்பிக்கப்படுவதில்லை என கூறி ஸ்பான்சர் செய்ய மறுத்துவிட்டனர்."

"கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரின் போது, எனது அணியினர் ஊடகத்தாரை சந்திக்கும் போது எனது போட்டியை ஒளிபரப்பக் கோரினர். ஆனால் அவர்கள் இதில் ஒற்றை இந்தியர் மட்டுமே இருப்பதால் காண்பிக்க முடியாது என்று கூறினர்."

"நாங்கள் தினந்தோரும் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றோம். சமூக வலைதளங்கள் சிறப்பான ஒன்று தான், ஆனால் அதில் கேலி கிண்டல்களும் இருக்கத் தான் செய்கின்றன. அனைவரும் அதில் அங்கம் என நினைத்துக் கொள்கின்றனர். இதனால் தினமும் விழித்துக் கொள்ளும் போது, மன உறுதியுடன் இருக்க வேண்டும்."

"டென்னிஸ் குறித்து என் மனைவி எனக்கு எந்த அறிவுரையும் கூறமாட்டார். மாறாக சக டென்னிஸ் வீரர்களுடன் எனது தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தியுள்ளார்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News