பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய சபலென்கா
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
- சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தினார்.
ரியாத்:
உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இதில் 'பர்பிள்' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடம் வகிப்பவருமான ஜாங் கின்வென்(சீனா) 7-6 (7-4), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்தில் ஆடிய கின்வென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த ரைபகினா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், அரைஇறுதி சுற்றையும் உறுதி செய்தார்.