null
அமெரிக்க ஓபன்: ஜோகோவிச், சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரரான ஜோகோவிச் மற்றும் மால்டோவன் நாட்டை சேர்ந்த ராடு அல்போட் மோதினர்.
- இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், சகநாட்டவரான மாக்சிமிலியன் மார்டரர் உடன் மோதினார்.
இதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசிலின் தியாகோ செய்போத் வைல்ட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீரரான ரூப்லெவ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் தியாகோ செய்போத் வைல்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரரான ஜோகோவிச் மற்றும் மால்டோவன் நாட்டை சேர்ந்த ராடு அல்போட் மோதினர்.
இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ராடு அல்போட்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலருசிய வீராங்கனையான சபலென்கா ஆஸ்திரேலிய வீராங்கனையான பிரிசில்லா ஹான்னுடன் மோதினர். இதில் சபலென்கா 6-3,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.