அமெரிக்க ஓபன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
- முதல் இரண்டு செட்டுகளை இழந்த ஜோகோவிச், அதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடிவில்லை.
- 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினாலும் 4-வது செட்டை 6-4 இழந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரின்-ஐ எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 வயதான அலேக்சி பாபிரின் முதல் செட்டை 6-4, 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஷாக் அளித்தார்.
ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான விளையாடி 6-2 இந்த செட்டை கைப்பற்றினார். இதனால் அனுபவ வீரரான ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 4-வது செட்டை 4-6 என இழக்க, 6-4, 6-4, 2-6, 6-4 என தோல்வியடைந்து அதிர்ச்சிகரமாக அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே அல்காரஸ் 2-வது சுற்றில் தரநிலை பெறாத வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
2 மற்றும் 3-ம் நிலை வீரர்களான ஜோகோவி் மற்றும் அல்காரஸ் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.