டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் அரைஇறுதிக்கு தகுதி
- ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கோகோ காப்- இகா ஸ்வியாடெக் மோதினர்.
- இதில் வெற்றி பெற்ற கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
ரியாத்:
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க 'இளம் புயல்' கோகோ காப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) தோற்கடித்தார். 2-வது வெற்றியை சுவைத்த கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வெளியேற்றி, அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தார்.