டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரெவ், ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-10-08 15:51 GMT   |   Update On 2024-10-08 15:51 GMT
  • ஜோகோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிளேவியோ கோபோலியை வீழ்த்தினார்.
  • மற்றொரு ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் பிளேவியோ கோபோலியை எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6(6), 2-6, 7-6(2) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News