'செஸ் தம்பிக்கள்'- செல்ஃபி புகைப்படம் வெளியிட்ட விஸ்வநாதன் ஆனந்த்
- முதல்வர் ஸ்டாலின் குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு ‘தம்பி’ என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை:
நார்வே செஸ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் கிளாசிக்கல் சுற்றில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடத்தை கைப்பற்றினார். குரூப் ஏ சுற்றில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த தொடரில் மற்றொரு இந்திய வீரரான சந்திபன் சந்தாவும் பங்கேற்றார்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை, விஸ்வநாதன் ஆனந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 'அண்ணனுடன் செஸ் தம்பிகள் இரவு உணவுக்கு செல்கின்றனர்' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான லோகோவை கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தொடருக்கான குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு 'தம்பி' என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதை குறிப்பிடும் வகையில்தான் விஸ்வநாதன் ஆனந்த், 'செஸ் தம்பிக்கள்' என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.