விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி- தொடரையும் கைப்பற்றியது

Published On 2024-11-15 05:14 GMT   |   Update On 2024-11-15 05:14 GMT
  • வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
  • 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

க்ரோஸ் ஐலெட்டில்:

வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி க்ரோஸ் ஐலெட்டில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாவெல் 54 ரன்களும், ஷெபார்ட் 30 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சாகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 37 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின் வில் ஜாக்ஸ்(32 ரன்)-சாம் கர்ரன்(41 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. லிவிங்ஸ்டன் 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்களித்தார்.

இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை பெற்றது. அந்த அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது போட்டி 17-ந்தேதி நடக்கிறது.

Tags:    

Similar News