ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு
- குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட சப்பந்தோடு பகுதியில் அண்மைக் காலங்களாக கட்டபொம்மன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.
இந்த காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு வரும் யானை விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
தொடர்ந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியைச் செய்து வருகின்றன.
சேரம்பாடி மண்டாசாமி கோவில் பகுதி மற்றும் செவியோடு பகுதியில் இந்த கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.