செய்திகள்
சேலம்-சென்னை 8 வழி விரைவு சாலைக்கு 5-வது நாளாக நிலம் அளவீடு பணி தீவிரம்
சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு 18 கிராமங்களில் 20 கி.மீ. தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி இதுவரை முடிந்துள்ளது. 5-வது நாளான இன்று சேலம் உடையாப்பட்டி, எருமாபாளையம் ஆகிய பகுதிகளில் நில அளவீடு நடக்கிறது. #ChennaiSalemGreenExpressWay
சேலம்:
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மலைகள் உடைக்கப்பட உள்ளன.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். 5 மாவட்டங்களிலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே அந்த பகுதியில் முகாமிட்டுள்ள உளவுத்துறை போலீசார் போராட்டத்திற்கு தூண்டுபவர்களை கைது செய்து வருகிறார்கள். சேலத்தில் ஏற்கனவே போராட்டத்தை தூண்டியதாக சமூக ஆர்வலர் பியுஷ்மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான், கல்லூரி மாணவி வளர்மதி, தி.மு.க.வை சேர்ந்த முத்துக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து நில அளவீடு பணி நடைபெறும் பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேறு நபர்கள் ஆதரவின்றி தனியாக போராடி வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் நில அளவீடு பணி கடந்த 18-ந் தேதி தொடங்கியது. சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர் உள்பட பல கிராமங்களில் நில அளவீடு பணி முடிந்தது.
சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு 18 கிராமங்களில் 20 கி.மீ. தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி இதுவரை முடிந்துள்ளது. இன்னும் 16 கி.மீ. தூரத்திற்கு நிலம் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
5-வது நாளான இன்று சேலம் உடையாப்பட்டி, எருமாபாளையம் ஆகிய பகுதிகளில் நில அளவீடு நடக்கிறது. இந்த பகுதியிலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். #ChennaiSalemGreenExpressWay
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மலைகள் உடைக்கப்பட உள்ளன.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். 5 மாவட்டங்களிலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே அந்த பகுதியில் முகாமிட்டுள்ள உளவுத்துறை போலீசார் போராட்டத்திற்கு தூண்டுபவர்களை கைது செய்து வருகிறார்கள். சேலத்தில் ஏற்கனவே போராட்டத்தை தூண்டியதாக சமூக ஆர்வலர் பியுஷ்மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான், கல்லூரி மாணவி வளர்மதி, தி.மு.க.வை சேர்ந்த முத்துக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து நில அளவீடு பணி நடைபெறும் பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேறு நபர்கள் ஆதரவின்றி தனியாக போராடி வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் நில அளவீடு பணி கடந்த 18-ந் தேதி தொடங்கியது. சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர் உள்பட பல கிராமங்களில் நில அளவீடு பணி முடிந்தது.
நேற்று மின்னாம்பள்ளி, ராமலிங்காபுரம், சின்னகவுண்டாபுரம், வரகம்பாடி ஆகிய இடங்களில் நில அளவீடு பணி முடிந்தது. அப்போது பாதிக்கப்படும் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்ணீர் விட்டு கதறினர்.
சேலம் ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு வீட்டை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர். தனது வீட்டின் முன்பு சோகத்துடன் நிற்கும் பெண்ணை படத்தில் காணலாம்.