செய்திகள்
சந்திர கிரகணத்தையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தை யொட்டி பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. #LunarEclipse
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிமாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 12.24 மணிக்கு தொடங்கி நாளை காலை 2.23 மணிக்கு நிறைவடைகிறது.
இதனையொட்டி கோவிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம் மட்டும் நடக்கிறது.
இன்று இரவு 11.54 மணிமுதல் நாளை அதிகாலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரிவலம் செல்லும் நேரத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. ஆனால் தடையின்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடலாம். கோவில் வழிபாடுகளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆன்மீக வழக்கப்படி சந்திர கிரகணம் முடியும் அதிகாலை 3.49 மணிக்கு பிரம்ம தீர்த்த குளத்தில் தோஷ நிவர்த்திக்காக அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கிரகணத்தையொட்டி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் எந்தவித மாற்றமும், செய்யப்படவில்லை. பக்தர்கள் வழக்கம் போல கிரிவலம் சென்றனர். #LunarEclipse