செய்திகள்

குடிக்க பணம் கேட்டு தாயை கொடுமைப்படுத்திய வாலிபர் குத்திக் கொலை

Published On 2019-01-09 09:54 GMT   |   Update On 2019-01-09 09:54 GMT
குடிக்க பணம் கேட்டு தாயை கொடுமைப்படுத்திய வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாலாடி வட்டத்தை சேர்ந்தவர் தோபியாஸ் (32). வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்தது.

தோபியாசின் தாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை திருச்சூரை சேர்ந்த லோரன்ஸ் ஹோம் நர்சாக இருந்து கவனித்து வந்தார்.

தோபியாஸ் தனது தாயிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த தோபியாஸ் தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

இதனை லோரன்ஸ் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த லோரன்ஸ் மீன் வெட்டும் கத்தியால் தோபியாசை சரமாரியாக குத்தினார். அவரது வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக்  குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து பாலாடி வட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோபியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலாடி வட்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி லோரன்ஸை கைது செய்தனர். அவரை கொச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News