செய்திகள்
அதிநவீன ஆக்சிஜன் கருவி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்

Published On 2020-07-31 07:07 GMT   |   Update On 2020-07-31 07:07 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி ஒன்று மட்டுமே இருந்தது. தற்போது கூடுதலாக 5 அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
கோவை:

கொரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 5 அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி ஒன்று மட்டுமே இருந்தது. தற்போது கூடுதலாக 5 அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. பொதுவாக சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது ஆக்சிஜன் வழங்கப்படும். ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 6 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும். ஆனால் இந்த அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும். இவ்வாறு வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத்திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பை தடுக்க முடிகிறது. இந்த கருவி மூலம் மூச்சத்திணறல் ஏற்படும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News