தமிழ்நாடு
சேலத்தில் மோட்டார் சைக்கிளுடன் குழிக்குள் விழுந்து வாலிபர் பலி
சேலத்தில் மோட்டார் சைக்கிளுடன் குழிக்குள் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் 5 ரோடு அருகே உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பைபாஸ் சர்வீஸ் சாலை உள்ளது.இந்த சாலயையொட்டி கேஸ் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு உள்ளது.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் குழியில் விழுந்து பலியாகி கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், மற்றும் போக்குவரத்து துறை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் திருச்சி வலையூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிவா (வயது 35) என்பது தெரிய வந்துள்ளது, இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.