தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் செம்மலை

முன்னாள் அமைச்சர் செம்மலை மயக்கம்- ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-02-28 14:12 IST   |   Update On 2022-02-28 14:12:00 IST
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மயங்கிய சம்பவம் அங்கு நின்ற அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி, செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் நின்று கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் செம்மலை கோ‌ஷங்களை வாசிக்க, பின்னால் அனைவரும் கோ‌ஷம் எழுப்பினார்கள். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பேச தொடங்கினார். அப்போது செம்மலை திடீரென்று மயங்கி சாய்ந்தார். உடனே அருகில் நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்துக் கொண்டனர்.  இதையடுத்து அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த செம்மலை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் செம்மலை மயங்கிய சம்பவம் அங்கு நின்ற அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News