தமிழ்நாடு

பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் முன்பு 'செல்பி' எடுக்க ரூ.25 கட்டணம்- சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Published On 2024-09-30 05:56 GMT   |   Update On 2024-09-30 05:56 GMT
  • தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
  • கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டு வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் பலர் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டனர். அது தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

அதனை கண்டு ரசிக்க உள்ளூர் சுற்றுலா பணிகள் ஆர்வம் காட்டுவதை விட அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவற்றை பார்வையிட வரும்போது அப்படியே சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.

தற்போது கேரளாவில் இருந்து தினமும் வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார்களை நிறுத்திவிட்டு வயல்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசிப்பதற்கு செல்லும்போது அவர்களிடம் வயல் உரிமையாளர்கள் ஒரு நபருக்கு ரூ. 25 வசூல் செய்து வருகின்றனர்.

பணம் செலுத்தி சூரியகாந்தி மலர்களை ரசிக்கும் கேரளா சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களின் நடுவே நின்று போட்டோ எடுத்து கொண்டாலோ அல்லது அதனை கண்களால் கண்டு ரசித்தாலோ செல்வம் பெருகும் என கேரளா பகுதி மக்களிடையே வழக்கமாக பேசப்பட்டு வருகிறது.

இதனாலேயே கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர். கேரளாவை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதிகளும் ஆர்வமுடன் போட்டோ சூட் நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News