தமிழ்நாடு
ஆவின் பாலகங்களில் மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 30 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையானது.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையாகி உள்ளது.
சென்னை:
கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஆவின் பாலகங்களில் மோர், லெஸ்சி, குல்பி ஐஸ் விற்பனை அதிகமாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 30 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையானது. இந்த ஆண்டு இப்போது வெயில் உச்சத்தில் இருப்பதால் ஏப்ரல் மாதம் முதல் தினசரி 40 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையாகி உள்ளது.
இதுபோன்று பாக்கெட் மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 10 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையாகி உள்ளது.
இது தவிர லெஸ்சி, குல்பி ஐஸ், கப் ஐஸ், கோன்ஐஸ், பாதாம் கீர் பாட்டில் விற்பனையும் இருமடங்கு அதிகரித்துள்ளதால் இதன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.