தமிழ்நாடு
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு: நாளை முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு 300 சிறப்பு பஸ்கள்- கலெக்டர் கலைச்செல்வி தகவல்
- ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்-திருத்தணிக்கு 100 பஸ்கள், அரக்கோணம்-திருத்தணிக்கு 25 பஸ்கள், சென்னை-திருத்தணிக்கு 100 பஸ்கள், திருப்பதி-திருத்தணிக்கு 75 பஸ்கள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.