தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 3 மணி நிலவரப்படி 64.44 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2024-07-10 10:23 GMT   |   Update On 2024-07-10 10:23 GMT
  • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
  • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News