தமிழ்நாடு

அரவிந்த்சாமி படத்துடன் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர். அதற்கு பதிலாக எம்.ஜி.ஆர். படம் வைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமி படத்துடன் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்

Published On 2024-01-17 06:16 GMT   |   Update On 2024-01-17 06:16 GMT
  • பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
  • சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் மாதனூர் அடுத்த கீழ்மிட்டாளம் அ.தி.மு.க. கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.

இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட அ.தி.மு.க.வினர் வந்தனர். சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதைக்கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.

Tags:    

Similar News