"என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை சஸ்பெண்ட்
- வெள்ளதுரை இன்று ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- வெள்ளதுரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் கண்காணிப்பாளராக தற்போது பணிபுரிந்து வந்தார்.
சென்னை:
தமிழக காவல் துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த கூடுதல் சூப்பிரண்டு வெள்ளதுரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்
வெள்ளதுரை இன்று ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவில் இடம் பெற்றிருந்தார். அப்போதுதான் அவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அதன்பிறகு சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணி பிரபல ரவுடிகள் கொள்ளையர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை என்கவுண்டர் செய்துள்ளார்.
வெள்ளதுரை திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் கண்காணிப்பாளராக தற்போது பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கையில் ராமு என்கிற கொக்கி குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வழக்கில்தான் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.