தமிழ்நாடு

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

Published On 2024-06-26 16:06 GMT   |   Update On 2024-06-26 16:06 GMT
  • கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா்.
  • கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரி நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது

எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.

எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!

கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News