விமானப்படை சாகச நிகழ்ச்சி: உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்வு
- வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
- கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து உடல் நலம் பாதித்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பியபோது அவருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, பெருங்குளத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நிகழ்ச்சியின்போது மயக்கம் அடைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதுவரை நான்கு நபர்கள் உயிர் இழந்த நிலையில் தற்போது ஐந்தாவதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளார். பார்த்தசாரதி என்பவர் ஆர்ச் வழியாக நின்று கொண்டு வான்வழி சாகசங்களை கண்டு களித்துள்ளார்.
அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுகிறது.