தமிழ்நாடு (Tamil Nadu)

ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

Published On 2024-03-30 12:47 GMT   |   Update On 2024-03-30 12:47 GMT
  • ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்
  • ஓ.பன்னீர்செல்வம் விரும்பிக் கேட்ட வாளி சின்னம், அவர் பெயரிலேயே உள்ள வேறு ஒரு பன்னீர்செலவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் விரும்பிக் கேட்ட வாளி சின்னம், அவர் பெயரிலேயே உள்ள வேறு ஒரு பன்னீர்செலவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மொத்தம் 6 பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News